பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி விபத்து: பெண் உயிரிழப்பு
X

பைல் படம்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி பஞ்சவர்ணம், 45. இவர்கள் இருவரும் தோட்டத்தில் வேலை செய்தனர். பணிகளை முடித்து விட்டு, முருகன் மாடுகளை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து செல்ல, அவரது மனைவி பஞ்சவர்ணம் தலைச்சுமையுடன் பின்னே நடந்து வந்தார்.

இவர்கள் பெரியகுளம் ரோட்டோரம் நடந்து வரும் போது, பின்புறமாக வந்த ஆட்டோ பஞ்சவர்ணம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவர்ணம் பலியானார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது