தேனி அ.தி.மு.க.விலும் ஆடியோ வெளீயீடு

தேனி அ.தி.மு.க.விலும் ஆடியோ வெளீயீடு
X
தேனி அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை விமர்சித்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது

தேனி தி.மு.க.,வில் நகராட்சி தலைவரும், கவுன்சிலரும் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேனி அ.தி.மு.க.,விலும் மாவட்ட செயலாளர் சையதுகான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு எதிரான ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அ.தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் முக்கிய பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படாமல், நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், கட்சிக்காக சிறை சென்றவர்கள், சீனியர்கள் ஒதுக்கப்படுவதாகவும், பணம் உள்ளவர்களும், புதிதாக வந்தவர்களும் நியமிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்த அ.தி.மு.க. நிர்வாகிகள், புதிய நிர்வாகிகள் குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்குவோம் என தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture