/* */

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி: கதவை உடைத்து பெண்ணை மீட்ட போலீஸ்காரர்

சினிமா பாணியில் கதவை உடைத்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரர். பெரும் விபத்து தவிர்ப்பு.

HIGHLIGHTS

கேஸ்  சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி: கதவை உடைத்து பெண்ணை மீட்ட போலீஸ்காரர்
X

துணிச்சலுடன் செயல்பட்ட போலீஸ்காரர் சுரேஷை தேனி மாவட்ட எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார்.

தேனி மாவட்டம், போடியில் ஒரு பெண் (பெண்ணின் முகவரி வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டனர்) தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் மனம் உடைந்து இன்று மாலை தனது வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த போடி போலீஸ்காரர் எஸ்.சுரேஷ் தகவல் அறிந்த அடுத்த நொடியே கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தார்.

சிலிண்டரில் கேஸ் கசிந்து கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணை தீ பற்ற வைக்க விடாமல் தடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி பக்குமாக சிலிண்டரை மூடி காஸ் கசிவை நிறுத்தினார். இவ்வளவு சிக்கலான பிரச்னையை ஒரு நொடிப்பொழுதில் மிகவும் நுட்பமாக கையாண்டு அந்த பெண்ணையும், சுற்றிலும் இருந்த மக்களையும் போலீஸ்காரர் பாதுகாத்தார். காரணம் சிலிண்டர் பற்ற வைத்து வெடித்து தீப்பற்றி இருந்தால் பக்கத்திலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். காரணம் அந்த பெண் வாழ்ந்தது நெரிசலான குடியிருப்பு பகுதி. பெரும் பிரச்னையை தவிர்த்த துணிச்சல் போலீஸ்காரர் சுரேஷை தேனி மாவட்ட எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். தேனி மாவட்ட பொதுமக்கள் மத்தியில் போலீஸ்காரர் சுரேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Updated On: 12 Aug 2021 5:58 AM GMT

Related News