தேனி கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

தேனி கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
X

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி.

போலீசாரின் அலட்சியத்தால் மகன் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என மனம் வருந்திய மூதாட்டி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே கோகிலாபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ், 55. இவரது மகன் மற்றும் மருமகள் இடையே குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இது பற்றி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் முறையாக விசாரித்து இருந்தால் இருவரும் சேர்ந்து வாழ வழி ஏற்பட்டிருக்கும். ஆனால் போலீசார் தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை. இதனால் எனது மகன் வாழ்க்கை சீரழிந்து வருகிறது எனக்கூறி மூதாட்டி அல்போன்ஸ் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் நின்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை காப்பாற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!