தேவாரம் கனரா வங்கியில் மனைவியை வெட்டிய கணவன் தலைமறைவு

தேவாரம் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு இடையே பல நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. மனைவியின் மீது கணவன் சந்தேகமடைந்துள்ளார். இதனால் பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை பிரேமலதா நகைகளை அடகு வைக்க தேவாரம் கனரா வங்கிக்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து வங்கிக்கு வந்த வெள்ளைச்சாமி மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சராமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த பிரேமலதா அலறினார்.
வங்கியில் இருந்தவர்கள் பிரேமலதாவை சூழ்ந்ததும் வெள்ளைச்சாமி தப்பி ஓடி விட்டார். தற்போது பிரேமலதா உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேவாரம் போலீசார் தலைமறைவாக இருக்கும் வெள்ளைச்சாமியை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu