ஆர்எஸ்எஸ் நிர்வாகி மீது தாக்குதல்: கம்பத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

ஆர்எஸ்எஸ் நிர்வாகி மீது தாக்குதல்: கம்பத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பங்கேற்றன

ஆர்எஸ்.எஸ் பொறுப்பாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்பொறுப்பாளர் ரவிக்குமார்ஜி கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பாஜக., உட்பட இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்பம் காந்திசிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக கம்பம் நகர தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சசிக்குமார், லோகநாதன், பாஜக நகர பொதுச்செயலாளர் பழனிக்குமார், மாவட்ட தலைவர் பாண்டியன், மாநில துணைத்தலைவர் ராஜபாண்டியன், இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் மூவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!