இனியாவது மனச்சாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் கடவுளின் தேசத்து மக்களே...

இனியாவது மனச்சாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் கடவுளின் தேசத்து மக்களே...

பைல் படம்

உலக அளவில் பார்க்க வேண்டிய 52 இடங்களில் ஒன்றாக கேரளாவை தேர்ந்தெடுத்திருக்கிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் வெளியிடும் பார்வையிட வேண்டிய இடங்களின் பட்டியலில் கேரளா 13 -ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் இருந்து பட்டியலிடப்பட்ட ஒரே சுற்றுலா தலமும் கேரளா மட்டும் தான்.

கேரளாவை அதன் கடற்கரைகள், காயல் குளங்கள், உணவு வகைகள் மற்றும் செழுமையான கலாச்சார மரபுகளுக்கு பெயர் பெற்ற தென்னிந்திய மாநிலம் என்று அதன் அறிக்கை விவரிக்கிறது.குமரகம் மற்றும் மறவந்துருத்து உட்பட மாநிலத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த சுற்றுலா தலங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் இந்த செய்தியை பதிவிட்டு, சமூக சுற்றுலாவுக்கான அணுகுமுறைக்கு இது அங்கீகாரம் என்று கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் பார்வையிட வேண்டிய 52 இடங்களில் கேரளாவை டைம்ஸ் தேர்வு செய்துள்ளது,,, கேரளாவின் செழுமையான கலாச்சாரம் மற்றும் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளை ரசிக்க பயணிகளை அனுமதிக்கும் சமூக சுற்றுலாவுக்கான எங்கள் முன்மாதிரியான அணுகுமுறை பாராட்டப்பட்டது. கேரள சுற்றுலாவின் மற்றொரு அற்புதமான சாதனை என்று விஜயன் ட்வீட் செய்துள்ளார். .

பனை மரத்தில் ஏறவும், ஆண்டு விழாவின் போது கோயிலுக்குச் செல்லவும், கிராமப்புற வாழ்க்கையின் நிலையான சுவையைப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடமாக நியூயார்க் டைம்ஸ் கேரளாவை விவரிக்கிறது. பயணப் பிரியர்களுக்கு எந்த இடத்திற்கு சென்றாலும் அது நிறைவைத் தரும். ஆனால் சாமானியர்களுக்கோ அல்லது பட்ஜெட் சுற்றுலாவாசிகளுக்கோ எந்தெந்த இடங்கள் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் என்பது பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிந்தால், அது மிகுந்த பயனை அளிப்பவையாக இருக்கும் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள்.

பட்டியலில் லண்டன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஜப்பானில் மோரியோகா, அமெரிக்காவின் நினைவுச் சின்ன பள்ளத்தாக்கு நவாஜோ பழங்குடி பூங்கா, ஸ்காட்லாந்தில் கில்மார்ட்டின் க்ளென் மற்றும் நியூசிலாந்தில் ஆக்லாந்து, கலிபோர்னியாவில் உள்ள பாம் ஸ்பிரிங்ஸ், ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவு, அல்பேனியாவில் உள்ள வ்ஜோசா நதி, கானாவில் உள்ள அக்ரா, நார்வேயின் டிராம்சோ, பிரேசில், பூட்டானில் உள்ள லெனிஸ் மரன்ஹென்செஸ் தேசிய பூங்கா, தென் கரோலினாவின் கிரீன்வில்லே மற்றும் டக்சன் (அரிசோனா) ஆகியவையும் முதல் பட்டியலில் உள்ளன.

இது குறித்து பெரியாறு- வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் கூறியதாவது: சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் கேரளா பெற்றிருக்கும் இந்த சிறப்புக்கு நம்முடைய வாழ்த்துகள். அதே நேரத்தில் எங்கள் ஆதங்கத்தையும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.தயவுசெய்து உங்கள் மாநில மருத்துவக் கழிவுகளையும், கோழிக் கழிவுகளையும், மென்பொருள் கழிவுகளையும், இன்ன பிற நச்சுத்தன்மை உடைய கழிவுகளையும் எங்கள் மாநிலத்திற்கு திருட்டுத்தனமாக அனுப்பி வைக்காதீர்கள் தோழர்களே. இனியாவது சுகாதாரத்தினை பேணிக்காப்பதிலும், பிறர் சுகாதாரத்தை மதிப்பதிலும் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags

Next Story