தேனி மாவட்டத்தில் குறைந்தது மழை... தொடங்கியது பனிப்பொழிவு...

தேனி மாவட்டத்தில் குறைந்தது  மழை...  தொடங்கியது பனிப்பொழிவு...
X
தேனி மாவட்டத்தில் மழை அளவு குறைந்து பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கி உள்ளது

தேனி மாவட்டத்தில் நேற்று எங்குமே மழை பெய்யவில்லை. மாறாக கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு இருந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக பெய்த பலத்த மழை சற்று குறைந்துள்ளது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் விவசாயிகளின் மனம் குளிரும் அளவு மழை பெய்தது. முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக 142 அடி என்ற உயரத்திலேயே நீடித்து வருகிறது. வைகை அணை நீர் மட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக 70.18 என்ற அளவிலேயே உள்ளது.

பலத்த மழையால் வைகை, முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, சண்முகாநதி, சுருளி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வடிந்து விட்டது. இந்த ஆறுகளில் சதாரண நேரங்களை போல் தண்ணீர் இன்னும் வந்து கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் (இன்று காலை 6 மணி நிலவரப்படி) எங்குமே மழை பதிவாகவில்லை. மாறாக கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இன்று காலை பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டது. குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பாதைகளில் மஞ்சுமூட்டம் (பனிமூட்டம்) அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.இந்த பனி மூட்டம் அதிகபட்சம் 8 மணி வரை நிலவுகிறது. அதற்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!