தேனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத குழந்தைக்கு நடந்த அபூர்வ சிகிச்சை
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ஏழு மாத குழந்தையின் வயிற்றை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பாரிசோதித்தனர்.
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ஏழு மாத குழந்தைக்கு மிக நவீன மற்றும் அபூர்வ வகை சிகிச்சை மருத்துவர்களால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் ஏழு மாதம் ஆன ஆண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. (மருத்துவ விதிகளின் படி பெயர், விவரம் வெளியிடப்படவில்லை). இந்த குழந்தைக்கு கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதுவும் ரத்தம், சளி கலந்த வாந்தி, வயிற்றுப்போக்கு என்பதால் குழந்தை மிகவும் பலகீனமாகி விட்டது.
பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பி.ஜெயக்குமார், குழந்தைகள் நல மருத்துவர் அஜய் அரவிந்த் ஆகியோர் குழந்தையை பரிசோதனை செய்தனர். வயிற்றில் இரைப்பை மற்றும் குடலில் ஏற்பட்ட பிரச்னையே குழந்தைக்கு ஏற்பட்ட இந்த தொல்லைக்கு காரணம் என கண்டறிந்தனர். ஆனால் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு குழந்தையின் உடல்நிலை சாதகமான நிலையில் இல்லை.ஆபரேஷன் இல்லாமல், குழந்தை வயிற்றில் உள்ள பிரச்னையை சரி செய்வது ஒன்று தான் சிறந்த வழி என தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக குழந்தையின் வயிற்றில் உப்பு கலந்த தண்ணீர் செலுத்தி இரைப்பை, குடல் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். பின்னர், அதேபாணியில் வயிற்றுக்குள் மருந்து செலுத்தினர். இந்த சிகிச்சை நிறைவடைந்ததும், அழுவதை நிறுத்திய குழந்தை உணவும் எடுத்துக் கொள்ளத்தொடங்கியது. படிப்படியாக குணமடைந்த குழந்தை இரண்டே நாளில் நலமுடன் வீடு திரும்பியது. மிகவும் நுட்பமான, சிக்கலான இந்த சிகிச்சை முறையினை நவீன முறையில் மேற்கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவை, மருத்துவமனை நிர்வாகமும், பெற்றோர்களும் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu