அசோக் சக்ரா விருது பெற்ற நிஜ ஹீரோ

பைல் படம்
02 அக்டோபர் 2007 காஷ்மீரின் பரமுல்லா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வருகிறது, அப்பொழுது தான் ரோந்து பணியில் ஈடுபட்டுவிட்டு வந்த மேஜர் தினேஷ் ரகுராமனுக்கு செய்தி வருகிறது.. இப்பொழுது தான் இரவு ரோந்து பனி முடித்து வந்திருக்கிறீர்கள் ஓய்வெடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சக அதிகாரி மேஜர் வினய் சொல்கிறார்.
பரவாயில்லை நானும் வருகிறேன் என்று தனது சகாக்களுடன் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்திற்கு செல்கிறார்.. குழு குழுவாக பிரிந்து தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை தேடுகிறார்கள்.. அப்பொழுது தனது சக அதிகாரி மேஜர் வினய் மற்றும் , இரண்டு வீரர்களும் குண்டடிபட்டு உயிருக்குக்கு போராடிய நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்டார்கள் கடுமையான துப்பாக்கி சண்டை.. யார் முதலில் தீவிரவாதிகள் இருப்பிடத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வீரர்களை மீட்பது என்று குழு தீர்மானிக்கும் முன் நான் முன்னாள் சென்று தாக்குகிறேன் எனக்கு கவரிங் பயர் கொடுத்துக்கொண்டு பின்னால் வாருங்கள், கவனம் இந்த தாக்குதலில் நம்மில் எவருக்கும் சிறு காயம் கூட ஏற்படக்கூடாது என்று சொல்லிவிட்டு தீவிரவாதிகளை நோக்கி ஊர்ந்து செல்கிறார்.
கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது., சாதுரியமாக ஊர்ந்து சென்று அதிரடி தாக்குதல் நடத்துகிறார், இதை சற்றும் எதிர்பார்க்காத தீவிரவாதிகள் தங்கள் பிடியிலிருந்து வீரர்களை விட்டுவிட்டுஓட்டம் பிடித்தனர், உடனடியாக காயம்பட்ட வீரர்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல உத்தரவு பிறப்பித்துவிட்டு பின்வாங்கி ஓடும்போது தீவிரவாதியை துரத்தி சென்று அவனுடன் சண்டையிட்டு அவனை கொன்று விடுகிறார்.. உடலில் குண்டு காயம்.. மேஜருக்கு குண்டடி பட்டுவிட்டது மருத்துவ குழுவை அனுப்புங்கள் என்று ரேடியோ செட்டில் சகா வீரர் தகவல் அனுப்புகிறார். எனக்கு எனக்கு ஒன்றும் இல்லை முதலில் தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் உள்ளே ஒன்று அல்லது இரண்டு தீவிரவாதிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது நான் சென்று கிரேனைட் வீசுகிறேன் , தீவிரவாதிகள் தப்பி வெளியே வருவார்கள் அவர்களை சுட்டு தள்ளுங்கள் என்று கூறிவிட்டு சக வீரர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் உள்ளே ஊர்ந்து செல்கிறார். உள்ளே கடுமையான துப்பாக்கி சத்தம், சிறிது நேரத்தில் அந்த இடம் அமைதியானது.. வீரர்கள் உள்ளே சென்று பார்க்கும்போது உள்ளிருந்த தீவிரவாதி கொல்லப்பட்டிருந்தான், மேஜர் தினேஷ் ரகுராமன் சுயநினைவின்றி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார், அவரை உடனடியாக ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி மாவீரன் தினேஷ் ரகுராமன் வீரமரணமடைந்தார்.
மேஜர் தினேஷ் ராணுவ குடும்பத்திலிருந்து வந்தவர், தனது பெற்றோருக்கு ஒரே ஆண் குழந்தை.. அவரது தந்தை கேப்டன் மூர்த்தி. கைநிறைய சம்பாதிக்கும் அவர் தனது மகனை வேறு நல்ல பணியில் சேர்த்துவிட்டிருக்கலாம் மாறாக தன்னைப்போல் அவரையும் ராணுவ அதிகாரியாக்கி அழகுபார்த்தார். எத்தனையோ ராணுவ குடும்பங்கள் வசதிவாய்ப்புகள் இருந்தாலும் நாட்டிற்காக தங்களது வாரிசுகளை ராணுவத்தில் சேர்த்து விடுகின்றனர்.. அது ராணுவ பாரம்பரியம்.
இளம் வயதில் கணவனை இழக்கும் மனைவியின் மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மேஜர் தினேஷ் ரகுராம் போன்ற போர் வீரர்களை பற்றி யாருக்கும் கவலை இல்லை, நமக்கு தெரிந்தது எல்லாம் சினிமா நடிகர்களை மட்டும் தான். தனது சுயநலம் பார்க்காமல் தனது சகவீரர்கள் உயிரை காப்பாற்றி தன் இன்னுயிரை தியாகம் செய்த மேஜர் தினேஷ் ரகுராமனுக்கு இந்திய அரசாங்கம் நாட்டிலேயே அமைதிகாலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான அசோக் சக்ரா விருதுகொடுத்து கவுரவித்தது. சினிமாநடிகர்கள் வீடு முன்பு இரவெல்லாம் கண்விழித்து காத்திருந்து அவர்கள் பின்னல் மூச்சிரைக்க ஓடி செல்லும் இளைய தமிழ் சமுதாயமே.. உங்கள் நிஜ ஹீரோக்கள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu