குடியிருப்புகள், விவசாய நிலங்களாக மாற்றப்படும் குளங்கள், கண்மாய்கள்..!

குடியிருப்புகள், விவசாய நிலங்களாக  மாற்றப்படும் குளங்கள், கண்மாய்கள்..!
X

பைல் படம்

கெங்குவார்பட்டி, கல்லுப்பட்டியில் நீர் நிலைகளை அழித்து குடியிருப்புகளா கவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மற்றும் கல்லுப்பட்டியில் அரசிற்கு சொந்தமான நீர்நிலைகள் மற்றும் குளங்கள் உள்ளன. இதில் ஜி கல்லுப்பட்டி பகுதியில் பல நீர் நிலைகள் மற்றும் கசிவு நீர் குட்டைகள் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கட்டப்பட்டு மக்களுக்கு பயன்பெற்று வந்தது.

இந்நிலையில் பாரி பியூட்டிபுல் கண்ட்ரி எனப்படும் பாரி எஸ்டேட் நிறுவனத்தினரும் மற்றும் தனிப்பட்ட நபர்களும் இங்கு உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து போலி பட்டா மற்றும் பதிவுகள் மூலம் நீர்நிலைகளை அழித்து ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர்.

அதேபோல கெங்குவார்பட்டி கிராமத்தில் பேரையன் குளம் என்று ஒரு குளம் தற்போது வரை அரசு பதிவேட்டில் உள்ளது. வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற கதையை போல அந்த குளத்தை காணவில்லை. அதேபோல வைரவன் அணைக்கட்டு பகுதியில் கீழ் பகுதியில் மஞ்சளாற்று பாதையினை ஆக்கிரமித்து தனிநபர்கள் தென்னந்தோப்பு அமைத்து அனுபவித்து வருகின்றனர்.

ஆகையால் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணிப் துறையினர் இதை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுத்து நீர் நிலைகளை மீட்டுத் தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாக விவசாய சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் மீது சிறப்பு கவனம் கொண்டு மீட்டுத் தருமாறு பொதுமக்கள் சார்பாக விவசாய சங்கத்தினரும் அனைத்து அரசியல் கட்சியினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!