2 நாட்களாக மழை இல்லாததால் சரிகிறது முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்
Mullaperiyar Dam Water Level- முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து 20 நாட்களாக மழை பெய்தது. அணை நீர் மட்டம் மெல்ல உயர்ந்து 135.90 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கேரள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிரம்பாத அணைக்கு எதற்கு வெள்ள அபாய எச்சரிக்கை என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணைக்கண்காணிப்புக்குழுவும் ஆய்வு செய்தது. இந்த சமயத்தில் இரண்டு நாட்களாக மழை குறைந்ததால், நீர் வரத்து விநாடிக்கு 1448 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1900ம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர் மட்டம் மெல்ல குறைந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 135.75 அடிக்கு வந்தது. இன்று அணைப்பகுதியில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் மீண்டும் நீர் வரத்து அதிகரிக்க கூடும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu