/* */

பள்ளி கல்லூரிகள் திறப்பு - கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா: பீதியில் தேனி மக்கள்

கேரளாவில் அதிக வேகமாக பரவும் கொரோனா தொற்றால் தேனி மாவட்டத்தில் மக்கள் பீதியில் உள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளி கல்லூரிகள் திறப்பு - கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா: பீதியில் தேனி மக்கள்
X

தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் முதல் தேதி முதல் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றால் மக்களிடம் பீதி காணப்படுகிறது.

தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் 75 கி.மீ., துாரம் எல்லைகளை பகிர்ந்துள்ளன. இந்த எல்லைகளை இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள், ஒரு மாநிலச்சாலை கடக்கிறது. மீதம் வனப்பகுதிகளாக இருந்தாலும், பல வனப்பாதைகள் இரு மாவட்டங்களையும் இணைக்கிறது.

பெயரளவில் தான் இடுக்கி மாவட்டம், தேனி மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளதே தவிர ஒட்டுமொத்த இடுக்கி மாவட்ட மக்களின் வாழ்வாதரமும் தேனி மாவட்டத்தை சார்ந்தே உள்ளது. அதேபோல் தேனி மாவட்டத்தில் வாழும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் (தேனி மாவட்ட மொத்த மக்கள் தொகை 13.50 லட்சம்) தங்கள் வாழ்வியல் ஆதாரங்களுக்காக இடுக்கி மாவட்டத்தை சார்ந்துள்ளனர்.

இதனை இருமாநில போலீசார், வருவாய்த்துறையினர், போக்குவரத்து துறையினர், மருத்துவத்துறையினர், உள்ளாட்சி துறையினர் தெளிவாக உணர்ந்துள்ளனர். எனவே தமிழக, கேரள எல்லைகளில் எப்போதும் பெருமளவு கெடுபிடி இருக்கவே, இருக்காது. எந்த நேரமும் மக்கள் சென்று வந்து கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளை செப்டம்பர் முதல் தேதி முதல் திறக்க முழுமையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கேரளாவில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி (நாளை திங்கள் கிழமை) முதல் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஐந்து நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. (இவ்வளவுக்கும் தமிழகத்தின் மக்கள் தொகையினை விட கேரளாவின் மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும். நிலப்பரப்பும் அதிகம் என்பதால் வீடுகளே இடைவெளியுடன் தான் கேரளாவில் கட்டப்பட்டுள்ளன).

கொரோனா தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலை முதலில் கேரளாவில் வேகமாக பரவி அதன் பின்னரே தமிழகத்திற்குள் பரவியது. இதன் மூலம் கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரித்தால் நாம் அடுத்த தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறோம் என்பது மறைமுக உண்மை என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்று முடிவுக்கு வராத நிலையில், பள்ளி, கல்லுாரிகளை திறப்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் நவீத்விக் இன்று எச்சரித்துள்ளார். மக்கள் தற்போது சமூக வலைதளங்கள் வாயிலாக உலகளாவிய கொரோனா சூழல், இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த விவரங்களை உடனுக்குடன் பெற்று வருகின்றனர். இப்போது சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையா? பொய்யா? என்பதை தற்போது வரை மத்திய, மாநில அரசுகளின் நிபுணர்கள் கூட உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.

அனைவரும் கூறும் ஒரே விஷயம், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் கொரோனா தொற்று உச்சம் தொடும் என்பது மட்டுமே. அதற்கேற்ப கேரளாவிலும், மகாராஷ்டிராவிலும் பாதிப்பு அதிகரிப்பது மக்களை கலவரப்படுத்தி வருகிறது. குழந்தைகளை பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என பெரும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து தங்களுக்கு தெரிந்த மருத்துவ மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டால், 'அது உங்கள் விருப்பம், எங்களால் எதுவும் உறுதியாக கூற முடியாது. காரணம் அடுத்து என்ன நடக்கும் என எங்களுக்கு எதுவும் தெரியாது' என பளீச்சென்று உண்மையை சொல்லி விடுகின்றனர். இதனால் தேனி மாவட்ட மக்கள் ரொம்பவே குழப்பத்தில் உள்ளனர். தேனி மாவட்டம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இந்த குழப்பமான மனநிலை நீடிக்கிறது என மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 29 Aug 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?