அரிசி கொம்பன் யானை தொடங்கியது அடுத்த சிக்கல்.
Komban Images with Quotes
Komban Images with Quotes
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பலரை கொன்ற அரிசிக்கொம்பன் யானையை ஒரு வழியாக வனத்துறை பிடித்து கொண்டு வந்து வண்ணாத்திபாறை மலைப்பகுதியில் விட்டுள்ளது. வண்ணாத்திபாறை மலைப்பகுதி என்பது தமிழக கேரள வனஎல்லைகள் சந்திக்கும் பகுதி. இந்த மலைப்பகுதியில் இருந்து அனைத்து திசைகளிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டி குமுளி நகர்ப்பகுதியும் உள்ளது. தமிழக நகராட்சிகளும், கிராம ஊராட்சிகளும் உள்ளன.
மிகவும் பெரியதாக பரந்து விரிந்த வனப்பகுதியாக இருந்தாலும், அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் இங்கு யானைகள் எளிதாக வந்து செல்லும். குறிப்பாக சுருளியாறு மின்நிலையத்திலும், மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்புகளிலும் எந்த நேரமும் யானைகளை காணலாம். அந்த அளவு அங்கு சகஜமாக யானைகள் வந்து செல்லும். இப்போது இந்த யானைகளை போல் அரிசி கொம்பனும் வந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பதட்டத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் வண்ணாத்திபாறை மலையில் இருந்து சில கி.மீ., தொலைவில் குமுளி நகரம் அமைந்துள்ளது. இதற்குள் அரிசிக்கொம்பன் வந்து விட்டால் அதோகதியாகி விடும். இப்படி கேரள பத்திரிக்கைகள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றன. தமிழகத்திற்குள் கேரள யானையை ஏன் அனுப்ப வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து கேரள பத்திரிக்கைகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இதுவரை தமிழக வனத்துறை கருத்து எதுவும் தெரிவிக்காமல், அமைதி காத்தாலும், கண்ணகிகோயில் விழா நடக்கும் போது, அந்த பகுதியில் (வண்ணாத்திபாறை மலை உச்சியில் தான் கண்ணகி கோயில் உள்ளது) அரிசிக்கொம்பன் வந்து விட்டால் என்ன செய்வது என்ற பதட்டத்தை சிலர் கிளப்பி வருவது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அரிசிக் கொம்பனை பிடித்ததும் மேட்டகானத்தில் விட்டு வெடிவைத்து தெற்கு நோக்கி விரட்டப் போகிறோம் என்று சொன்னார்கள். முறைப்படி ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அரிசி கொம்பன், மேட்டகானத்திலிருந்து தெற்கு நோக்கி விரட்டப்பட்டிருந்தால், அது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கும்.
ஆனால் மேட்டகானத்திலிருந்து இடது புறமாக திரும்பி வண்ணாத்திப் பாறை வனப்பகுதிக்குள் நகர ஆரம்பித்தது அரிசி கொம்பன். மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடக்கும் போது, அரிசிக்கொம்பன் வந்தால் நிலைமை மோசமாகி விடும்.
வண்ணாத்திப்பாறையில் இருந்து மேகமலை வனப்பகுதிக்குள் வரும் இரவங்கலாறுக்கு செல்வதற்கு அரிசி கொம்பனுக்கு அதிகபட்சம் ஒன்றரை மணி நேரமே பிடிக்கும். சுருளியை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு வழியாக அது சுருளிக்கு வர வேண்டும், அல்லது நேர் இடதுபுறமாக திரும்பி அது இரவங்கலாறுக்கு சென்று, வெள்ளிமலை ரேஞ்சுக்கு இடமாறி, அது கோரையூத்து காமன்கல்லு வழியாக வருசநாட்டை அடைய கூடும். அல்லது வாலிப்பாறை வழியாக கீழ் இறங்க கூடும்.
அரிசிக்கொம்பன் விரும்பி உண்பது அரிசி மற்றும் சீனி என்கிற நிலையில், அது தனக்கான விருப்ப உணவை தேடி வனத்துக்குள் அலைகிறது. அல்லது தேடி ஊருக்குள் வந்து விடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஓரிரு நாட்கள் முன்வரை வரை அரிசியையும் சீனியையும் எந்த நெருக்கடியிலும் சாப்பிட்டு வாழ்ந்த ஒரு யானையை, மனித நடமாட்டத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் விட்டுவிட்டதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக கேரள வனத்துறை நினைத்தது பெரிய தவறு என தமிழக, கேரள பத்திரிக்கைகள் கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu