தேனி பள்ளியில் இருக்கும் குரங்குகள் தொல்லையா, தெய்வீக சக்தியா?
பைல் படம்.
தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. மிகப்பெரிய வளாகம் என்பதால் மரங்களின் எண்ணிக்கையும் அதிகம். இதனால் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. ஒன்றல்ல.. இரண்டல்ல... பல நுாறு குரங்குகள் உள்ளன.
இந்த குரங்குகள் மாணவிகளின் சாப்பாடு, ஸ்நாக்ஸ்களை பறித்து சாப்பிட்டு விடுகின்றன. தண்ணீர் பாட்டிலை துாக்கிச் சென்று விடுகின்றன. பாடம் நடக்கும் வேளையில் வகுப்பறைக்குள் சென்று புத்தகங்களை கிழித்து விடுகின்றன.
இது குறித்து பள்ளி நிர்வாகம் வனத்துறையிடம் புகார் செய்தது. வனத்துறை ஐந்து முறைக்கும் மேல் முயற்சி செய்து, குரங்குகளை பிடித்து பல நுாறு கி.மீ., தொலைவிற்கு அப்பால் கொண்டு சென்று வனத்திற்குள் விட்டு வந்தனர். ஆனால் ஓரிரு நாட்களில் மீண்டும் குரங்குகள் பள்ளி வளாத்திற்குள் வந்து விடுகின்றன. இந்த வளாகத்திற்குள் இருந்து குரங்குகளை அகற்ற பள்ளி நிர்வாகம் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இப்போது மாணவிகளும், ஆசிரியர்களும், இதர பணியாளர்களும் குரங்குகளை அனுசரித்து வாழப்பழகி விட்டனர். இந்த வளாகத்தை விட்டு குரங்குகள் வெளியேறாமல் இருக்க இந்த பள்ளிக்குள் இருக்கும் தெய்வீக சக்தியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பள்ளியே நாடார் இன மக்கள் விரும்பி வணங்கும் பத்ரகாளியம்மன், மாரியம்மன், மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில்களின் சக்திகள் வளாகத்தில் நிறைந்திருக்கும் என்ற ஒரு கருத்தும் உலவுகிறது. இதனால் சில ஆசிரியர்களும், மாணவிகளும் குரங்குகளை வணங்கி தினமும் ஏதாவது பிரசாதம் சாப்பிட தருவதை வழக்கமாக்கி விட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu