கிக்பாக்சிங், கபாடி வீரர்களுக்கு தேனியில் பாராட்டு விழா
தேனியில் கிக்பாக்சிங், கபடி வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவின் போது, வீரர்கள் வி.ஐ.பி.,க்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட கிக்பாக்ஸிங் அசோஷியேஷன், சமூக நல்லிணக்க பேரவை, அறிவுச்சோலை ( இஸ்லாமிய நூலகம் மற்றும் தகவல் மையம்) தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி மற்றும் கபடி போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர்.
மாவட்ட கிக்பாக்ஸிங் அசோஷியேஷன் தலைவர் சுபேதார் மகாராஜன் தலைமை வகித்தார். சமூக நல்லிணக்க பேரவை செயலாளர் அன்பு வடிவேல் வரவேற்றார், பேராசிரியர் ஜோசப் சேவியர், தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநிலச் செயலாளர் மணி, ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பக ஆலோசகர் நடுவர் இளங்கோ, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் கண்ணன், ஜெய்பீம் புரட்சிப் புலிகள் அமைப்பின் தலைவர் அருந்தமிழ் அரசு, அறிவுச்சோலை தலைவர் காதர்பிச்சை, சில்வர் ஜூப்ளி அரிமா சங்க பிரமுகர் துரை வேணுகோபால், பெரியகுளம் வளர்ச்சி பேரவையின் பிரமுகர் அன்புக்கரசன், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ், ஜூனியர் சேம்பர் பயிற்சியாளர் துரைவேலன். திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மணிகண்டன், இந்திய செஞ்சிலுவைச் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் முகமது பாட்சா, ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆண்டிபட்டி சமூக செயற்பாட்டாளர் மாதவன், அறிவுச்சோலை நிர்வாக குழு உறுப்பினர் அபுதாகிர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
பெரியகுளம் அரிமா சங்கத் தலைவரும் விவசாய சங்க பிரமுகரான ராஜசேகர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ 5000 வழங்கி பாராட்டு தெரிவித்தார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பெரியகுளம் விளையாட்டு மையத்தின் தலைவர் அட்வகேட் மணி கார்த்திக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முகமது அலி ஜின்னா ஆகியோர் சாதனை படைத்த வீரர்களை கவுரவித்து பேசினர். சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பின் தலைவர் சம்மட்டி நாகராஜன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu