மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு விழா

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு விழா
X

தேனி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான மற்றும் தனித்திறன் சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனுடன்(மஞ்சள் பட்டு சட்டை அணிந்திருப்பவர்)  குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

மாநில அளவிலான மற்றும் தனித்திறன் சிலம்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் மாநில அளவிலான மற்றும் தனித்திறன் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. கம்பம் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை, கூடலுார் இரட்டை வால் மற்றும் அக்னி பயிற்சி பட்டறைகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றிகளை குவித்தனர். கம்பம் ராணாஸ் பயிற்சி பட்டறை வளாகத்தில் இந்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கூடலுார் சிலம்ப பயிற்சி மாஸ்டர் திருமால் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பாலமுருகன் வரவேற்றார். கம்பம் நகராட்சி துணைத்தலைவர் சுனேதா செல்வக்குமார், தி.மு.க., தெற்கு நகர செயலாளர் சூர்யா செல்வக்குமார், தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் போட்டோ பாண்டி, வின்னர் அலிம், டாக்டர் ஆசிக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai healthcare products