முதலில் குடிநீர் சப்ளை செய்யுங்க சார்... சுயேட்சை வேட்பாளரிடம் பெண்கள் முறையீடு...

முதலில் குடிநீர் சப்ளை செய்யுங்க சார்...  சுயேட்சை வேட்பாளரிடம் பெண்கள் முறையீடு...
X

தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயேட்சை  வேட்பாளர் ராஜன், வார்டு மக்களை சந்தித்து தென்னை மரச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

நல்ல குடிநீர் வேண்டுமென மக்கள் வைத்த கோரிக்கைக்கு மினரல் வாட்டர் சப்ளை செய்வேன் என அசத்திய தேனி நகராட்சி சுயேட்சை வேட்பாளர்

தன்னை அறிமுகம் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரிடம், 4வது வார்டு பெண்கள் முதலில் குடிநீர் சப்ளையை சரி செய்யுங்க .என்ற கோரிக்கை விடுத்தபோது சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரே சப்ளை செய்கிறேன் என அவர் உறுதியளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜன் தென்னை மரச்சின்னத்தில் போட்டியிடுகிறார். தொழிலபதிபரான இவர், மிகவும் வித்தியாசமான தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் வீடு, வீடாக சென்று முக்கிய பிரமுகர்களையும், மகளிர் குழு தலைவர்களையும் சந்தித்தார். அப்போது அவரிடம், 'நான்காவது வார்டு பகுதிக்கு வீரப்பஅய்யனார் கோயில் மலையடிவாரத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நீர் முன்பு மிகுந்த சுவை கொண்டதாக இருந்தது. தற்போது என்ன பிரச்னையோ தெரியவில்லை, குடிநீரின் தரம் சரியில்லை. எனவே எங்களுக்கு முதலி்ல் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். மிகவும் தரமான குடிநீர் வேண்டும் என்றனர். அதற்கு பதிலளித்த சுயேட்சை வேட்பாளர் ராஜன், 'நீங்கள் தென்னைமரச் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நகராட்சியை எதிர்பார்க்காமல் எனது சொந்த பணத்தில் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலை அமைத்து, வார்டு மக்களுக்கு தேவையான அளவு, (அன்லிமிட்) குடிநீர் சப்ளை செய்கிறேன் என உறுதி அளித்து அசத்தினார் வி.ஆர். ராஜன். மக்களும், முக்கிய பிரமுகர்களும் இவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!