சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி கிடக்கும் தேனி புதிய பஸ்ஸ்டாண்ட்..!
தேனி புதிய பேருந்து நிலையம். (கோப்பு படம்)
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கித் தவிப்பதால் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது.
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டி சில வருடங்களே ஆன நிலையில், பராமரிப்பு இன்மையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸ்டாண்டில் பல இடங்களில் சிறுநீர், மலம் கழித்து வைத்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மிகவும் அசுத்தம் காணப்படுகிறது. தவிர பஸ்ஸ்டாண்டை சுற்றிலும் ஆறுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் குடிமகன்களின் அடாவடி அதிகம் காணப்படுகிறது. கஞ்சா, புகையிலை விற்பனையும் களை கட்டி வருகிறது. பஸ்ஸ்டாண்டில் உள்ள பூங்கா இரவில் முழுமையாக குடிமகன்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுகிறது. இது தவிர பல சமூக விரோத செயல்களும் அங்கு நடக்கின்றன.
பஸ்ஸ்டாண்டில் உள்ள சுரங்க பாதைகளை மிகவும் மோசமான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் இரவில் பஸ்ஸ்டாண்ட் வரவே அச்சப்படுகின்றனர். இங்குள்ள அவுட் போஸ்ட் போலீஸ் ஸ்டேஷனை முழு வீச்சில் செயல்படுத்தி, குடிமகன்கள், சமூக விரோதிகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பஸ்ஸ்டாண்டினை சுத்தமாக பராமரித்து பயணிகளுக்கு குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உ ள்ளனர்.
தேனி புதிய பஸ்ஸ்டாண்ட்க்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவதுடன் கேரளா செல்வதற்கான ஒரு முக்கிய சந்திப்பாகவும் தேனி விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் பேருந்து நிலையம் இருந்தால் இது மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்திவிடும். அதனால் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu