தேனி மாவட்டத்தில் 3வது முறையாக ஜீரோ தொற்று: மாவட்ட சுகாதாரத்துறை நிம்மதி

தேனி மாவட்டத்தில் 3வது முறையாக ஜீரோ தொற்று: மாவட்ட சுகாதாரத்துறை நிம்மதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று மூன்றாவது முறையாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் இன்று மூன்றாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் சராசரியா 900 முதல் 1200 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் தினமும் காலையில் மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மூலம் வெளியாகும்.

இந்த மாதத்தில் மட்டும் இதற்கு முன்னர் இரண்டு நாள் கொரோனா தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என அறிவிக்கப்பட்டது. இன்றும் மூன்றாவது முறையாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தேனி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் யாராவது கொரோனா பரிசோதனை செய்திருந்து அவர்களுக்கு பாசிட்டிவ் என முடிவு வெளிவந்தால், அவர்கள் நேரடியாக தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பார்கள். அந்த கணக்கு அரசு வெளியிடும் மீடியா புல்லட்டின் அறிக்கையில் வெளியாகும்.

எப்படி இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களாகவே ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு மூன்றாவது முறையாக சைபரை தொட்டுள்ளது ஆறுதலாக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story