வருஷநாட்டில் மதுபாராக செயல்படும் கிராம ஊராட்சியின் சேவை மையம்
மதுபார் ஆக மாறி உள்ள தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சி சேவை மையம்.
தேனி மாவட்டம் வருஷநாடு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையம் மதுபாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சியில் 13.12 லட்சம் ரூபாய் செலவில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது. கட்டிய நாள் முதல் தற்போது வரை ஒரு நாள் கூட பயன்பாட்டிற்கு வரவில்லை. கிராம ஊராட்சி நிர்வாகமும் இந்த சேவை மையத்தை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டது. வருஷநாடு ஊராட்சியில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது மட்டுமின்றி, நான்கு இடங்களில் அனுமதியற்ற முறையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
போலீசாரும் இந்த அனுமதியற்ற மது விற்பனையை கண்டு கொள்ளவில்லை. இங்கு பாட்டில்களை வாங்கி வரும் குடிமகன்கள், கிராம ஊராட்சி கட்டடத்திற்குள் சென்று அமர்ந்து குடிக்கின்றனர்.
அங்கேயே தான் எல்லாமும் நடக்கிறது. போலீசாரோ, கிராம ஊராட்சி நிர்வாகமோ இதனை கண்டுகொள்ளவில்லை. பல லட்சம் செலவு செய்து, மகளிர் வளர்ச்சிக்காக அரசு கட்டிய சேவை மைய கட்டடம், குடிமகன்களுக்காவது பயன்படுகிறதே என வருஷநாடு கிராம ஊராட்சி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu