/* */

வைகையில் வெள்ள அபாயம் குறைந்தது; இன்று 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

வைகை ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது.

HIGHLIGHTS

வைகையில் வெள்ள அபாயம் குறைந்தது;   இன்று 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
X
வைகை அணை- கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வைகை அணையில், அதிக நீர் வரத்து இருந்தது. அணை நிரம்பியதால் வரும் தண்ணீர் முழுக்க ஆற்றில் திறக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியை தாண்டியது. வைகை ஆற்றில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடும் வெள்ளப்பெருக்கு இருந்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை குறைவால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை நிலரவரப்படி, அணைக்கு விநாடிக்கு, 3100 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், வைகை ஆற்றில் வெள்ள அபாயம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தற்போதும் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!