புலி நடமாட்டம்: வருஷநாட்டில் ஆடுகள் இறந்து கிடந்ததால் அச்சத்தில் மக்கள்
பைல் படம்
வருஷநாட்டில் உள்ள வனப்பகுதியில் புலி ஆடுகளை அடித்து கொன்றதால் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை புலிகள் சரணாலயத்தில் முகப்பு பகுதியில் வருஷநாடு மலைப்பகுதி உள்ளது. இந்த வனம் ஆயிரத்து நுாறு சதுர கி.மீ. க்கும் அதிக பரப்பு கொண்டது. எனவே புலி அடர்ந்த வனத்திற்குள் இருக்கிறது. பெரும்பாலும் மலையோர கிராமங்களி்ல், யானை, கரடி அடிக்கடி வந்து செல்லும். இது பொதுமக்களுக்கு பழகிப்போன விஷயம்.
இன்று காலை பாலுாத்து- சிறப்பாறை வனப்பகுதிகளுக்கு இடையில் மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தன. இவற்றை புலி அடித்து கொன்றிருக்கலாம் என மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.. வனத்துறை அதிகாரிகள் உண்மையி்ல் புலி நடமாட்டம் உள்ளதா? ஆடுகளை கொன்றது புலி தானா? என்பதை உறுதி செய்ய விசாரணையிலும், தேடுதல் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும் வனத்தை ஒட்டி உள்ள மலைக்கிராம மக்கள் விழிப்புடன் இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu