தேனி அருவிகளில் கொட்டுது வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி அருவிகளில் கொட்டுது வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
X

தேனி மாவட்டம் சுருளிஅருவி.

தேனி மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று மழை வெளுத்துக்கட்டியது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சுருளிஅருவி, சின்னசுருளி, கும்பக்கரை அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் யாராவது சிக்கினால் அவர்களை மீட்பது மிகுந்த சிரமம் ஆகி விடும். எனவே அருவிகளின் அருகே யாரும் செல்ல முடியாத அளவுக்கு வனத்துறை பாதுகாப்பு போட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் யாரும் அருவிகளில் குளிக்க வேண்டாம். விபரீதத்தில் முடிந்து விடும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்