தேனி மாவட்டத்தில் இன்று நான்காவது முறையாக கொரோனா பாதிப்பு ஜீரோ நிலையில் உள்ளது

பைல் படம்
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று நான்காவது முறையாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. தற்போதய நிலையில் தினமும் சராசரியாக ஆயிரம் முதல் ஆயிரத்து இருநுாறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இன்று காலை 796 பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் தெரிவித்தன. கடந்த மாதம் மூன்று முறை இதே போல் சைபர் தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாதம் முதல் முறையாக (மொதத்ததில் 4வது முறையாக) ஜீரோ நிலைக்கு வந்துள்ளது. தற்போதைய நிலையி்ல் 4 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் உற்சாகமடைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu