வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது

வைகை ஆற்றில் மணல் திருடிய  வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
X

தேனி அருகே வைகை ஆற்றில் நள்ளிரவில் மணல் அள்ளிய பொக்கலைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி அருகே வைகை ஆற்றில் மணல் திருடிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்

தேனி அருகே அம்மச்சியாபுரம் வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்களை பறிமுதல் செய்த க.விலக்கு போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், வைகை ஆற்றில் அம்மச்சியாபுரம் பகுதியில் இரவில் மணல் திருடுவதாக க.விலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், நேற்று இரவு அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்கலைன், டிப்பர் லாரிகள் உட்பட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். மணல் திருடியது தொடர்பாக இளையராஜா( 33), ஆண்டிச்சாமி(37), ஹரிராம்( 24) , சதீஷ்குமார்( 22 )ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story