கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ரூ.1.20 கோடி இலக்கு

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: ரூ.1.20 கோடி இலக்கு
X

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.


தேனி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். ரூ.1.20 கோடி விற்பனை செய்ய இலக்கு

தேனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி விற்பனையினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், தேனி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு துணிகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் துணிகளை வாங்கி ஆதரவு தர வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.

கோ-ஆப்டெக்ஸ் மதுரை மண்டல மேலாளர் மோகன்குமார், தணிக்கை மேலாளர் நாகராஜன், வடிவமைப்பு மேலாளர் ஞானப்பிரகாசம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்