போக்சோ வழக்கு விவரம் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 'அப்டேட்'

போக்சோ வழக்கு விவரம் குறித்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்டேட்
X

பைல் படம்

போக்சோ வழக்கு குறித்த தகவல்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் செய்யும் வசதி தேனி மாவட்டத்தில் அறிமுகம்

போக்சோ வழக்கு குறித்த தகவல்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் செய்யும் வசதி தேனி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்கரே கூறியதாவது: குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களை தடுப்பதில் தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம், அரசு நிவாரணம் பெற்றுத்தரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

தற்போது இந்த விஷயத்தில் புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த உள்ளோம். போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும், வழக்குகளின் தன்மை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் வாட்சாப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் புதிய தொழில்நுட்படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வழக்குகளின் நிலை, தன்மை, குற்றவாளிகளுக்கு வழக்கப்படும் தண்டனை குறித்த முழு விவரமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாட்சாப், அல்லது குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதற்காக தேனி எஸ்.பி. தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story