தேனி மாவட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்
தேனி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட 35 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. எப்போதுமே தேனி மாவட்டம் மழை மறைவு பிரதேசம் என்பதால், தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை தேவையான அளவும் பெய்யும். இந்த ஆண்டு வழக்கத்தை விட தென்மேற்கு பருவமழை குறைந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பதிவாகி வருகிறது. தற்போது தொடங்கி உள்ள பருவமழை, வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கும். எனவே நான்கு மாதம் தொடர்ச்சியாக மழைக்காலம் என்பதால், இப்போது நடவு செய்யும் கன்றுகள், நான்கு மாதத்தில் ஓரளவு வளர்ந்து விடும்.
எனவே, மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்படி, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும், 130 கிராம ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu