பெரியகுளம், தேனி அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் திறப்பு

பெரியகுளம், தேனி அரசு மருத்துவமனைகளில்  ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் திறப்பு
X

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை பிரதமர் திறந்து வைத்தார்.

பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரதமர் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியா முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமர் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தி்ல் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனை இன்று நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் மற்றும் மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்