மூல வைகையில் இடிந்த தடுப்பணை: பொதுப்பணித்துறை மெத்தனம்

மூல வைகையில் இடிந்த தடுப்பணை: பொதுப்பணித்துறை மெத்தனம்
X

வருஷநாடு மூல வைகையில் இடிந்து சேதமடைந்த தடுப்பணை

வருசநாட்டில் மூலவைகையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை வேறு தடுப்பணை கட்டப்படவில்லை

தேனி மாவட்டம் வருசநாட்டினை கடந்து மேகமலையில் மூல வைகை உற்பத்தியாகிறது. மூலவைகை கடக்கும் முதல் பெரிய ஊராட்சி வருஷநாடு. இங்கு குடிநீர், மற்றும் நிலத்தடி நீர் மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்காக தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டிய சில மாதங்களுக்குள் வந்த வெள்ளத்தில் சேதமடைந்து விட்டது.

உடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தடுப்பணை கட்டப்படவில்லை. பொதுப்பணித்துறையினரும் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போது வரும் தண்ணீர் தேங்காமல் ஆற்றில் சென்று கொண்டே உள்ளதால், வருசநாட்டில் குடிநீர் பிரச்னை, நிலத்தடி நீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு தடுப்பணையை மீண்டும் கட்டப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
ai marketing future