முல்லைபெரியாறு, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

முல்லைபெரியாறு, வைகை அணைக்கு  நீர் வரத்து அதிகரிப்பு
X

வைகை அணை ௬௫ அடியை எட்டிய நிலையில் நீர் நிறைந்து  ஆர்ப்பரித்து காணப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் முல்லை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டியில் 43.4 மி.மீ., பெரியகுளத்தில் 30 மி.மீ., வைகை அணையில் 38.8 மி.மீ., மஞ்சளாறில் 60 மி.மீ., பெரியகுளத்தில் 30 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் மழையளவு நல்லமுறையில் பதிவாகி உள்ளது.

இன்று காலை முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 117 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதி வழியாக விநாடிக்கு 2305 கனஅடியும், கேரள பகுதி வழியாக 3 ஆயிரம் கனஅடியும் (உத்தேசமாக, கூடுதலாகவும் இருக்கலாம்) திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 138.80 அடியாக உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 65 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 4175 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 1369 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் இன்று மாலை, அல்லது இரவு 66 அடியை எட்டும் என்பதால், வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!