சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்ய மாதம் ரூ.25 ஆயிரம் அரசு வழங்கல்
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வயறு டயாலஸிஸ் திட்டத்தின் கீழ் நோயாளிக்கு கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை இலவசமாக வழங்கினார்.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வயறு டயாலிஸிஸ் (peritoneal dialysis) என்ற நவீன சுத்திகரிப்பு சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். சிறுநீரகவியல்துறை தலைவர் டாக்டர் ராஜ்குமார், மருத்துவத்துறை தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு, மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன், குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக், சிறுநீரகவியல் சிறப்பு டாக்டர் மு.காமராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
வயறு டயாலஸிஸ் என்பது நவீன சுத்திகரிப்பு சிகிச்சை முறை ஆகும். இந்த சிகிச்சையினை வீட்டில் இருந்தவாறே நோயாளிகள் செய்து கொள்ளலாம். இதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகளை அரசு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று மாதந்தோறும் வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு இந்த திட்டத்தில் ஒரு நோயாளிக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுத்திகரிப்பு உபகரணங்கள், மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் சேர முதன் முறை மட்டும் நோயாளி மருத்துவமனைக்கு வர வேண்டும். அப்போது அவருக்கு தொடர் சிகிச்சை முறைகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். அடுத்தடுத்து மருந்துகள், உபகரணங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். அரசு மிகவும் அதிகளவு சலுகை வழங்கி வருகிறது. இந்த திட்டம் அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu