வைகை அணையில் துார்வாரும் பணிகள்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைகை அணை துார்வாரப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதும் துார்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

தேனி மாவட்டம், வைகை அணையினை துார்வாருவது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம், வைகை அணை நீர்மட்டம் 71 அடி ஆகும். இதில் 21 உயரம் வரை வண்டல் மண்ணும் சேறும் சேர்ந்துள்ளது. எனவே, நீர்மட்ட உயரம் 71 அடி வரை இருந்தாலும், அணையில் நீர் இருப்பு 51 அடியாகத்தான் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைகை அணையை துார்வார ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், வைகை அணை உட்பட சில அணைகளை துார்வார நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, வைகை அணையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், வைகை பெரியாறு கோட்டசெயற்பொறியாளர் சுகுமாறன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர்கள் ரித்திகா, மீனாட்சி, பொறியாளர்கள் குபேந்திரன், ஆனந்தன் உட்பட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர். மதகு பகுதி, மதகில் நீர் திறந்து விடும் பகுதி, நீர் மட்டத்தை குறிக்கும் கருவியின் செயல்பாடுகள், மழைமாணி, சுரங்கப்பாதை, கசிவுநீர், 58-ஆம் கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அணையில் இருந்து விநாடிக்கு 64 ஆயிரம் கனஅடி தண்ணீரை 14 மதகுகள் வழியே திறந்து விடுவது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

Tags

Next Story
1 ரூபாய் காபி பொடி போதும்! முகத்துல இருக்க முகப்பரு, கருமை எல்லாமே மறஞ்சிரும்! நம்பமுடியலல! வாங்க ட்ரை பண்ணி பாக்கலாம்!