போலி ஒப்பந்த ஆவண நிலமோசடி: ஆண்டிபட்டி துணை தாசில்தார் கைது
X
By - Thenivasi,Reporter |4 Dec 2021 7:30 AM IST
போலி ஒப்பந்த ஆவணம் மூலம் நில மோசடி செய்ததாக, ஆண்டிபட்டி துணை தாசில்தார் மணவாளனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தேனி ஊஞ்சாம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன். சங்கராபுரத்தில் உள்ள இவரது நிலத்தை, தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் 2021ம் ஆண்டு ஒண்ணரை கோடி ரூபாய் கொடுத்து கிரைய ஒப்பந்தம் பெற்றதாக கூறினார். இதற்கு அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய துணை தாசில்தார் மணவாளன் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலி ஆவணம் மூலம் மணவாளன், சந்தனபாண்டியன் ஆகியோர் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக சந்திரசேகரன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏற்கனவே சந்தனபாண்டியனை கைது செய்தனர். நேற்று இரவு துணை தாசில்தார் மணவாளனை கைது செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu