ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட நடவடிக்கை

ஆண்டிபட்டியில்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்  கட்ட நடவடிக்கை
X
ஆண்டிபட்டியில்,  கோர்ட் வளாகம் கட்டப்படும் இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, கலெக்டர் முரளீதரன் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் இடத்தை கலெக்டர் முரளீதரன், மற்றும் நீதிபதிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு, 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திம்மரசநாயக்கனுார் கிராமத்தில் அமைந்துள்ள இந்த இடத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, கலெக்டர் முரளீதரன், மக்கள் நீதிமன்ற தலைவர் முகமது ஜியாவுதீன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், குற்றவியல் நீதிபதி ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த இடத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் கோர்ட் வளாகம் கட்டும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story