ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கல்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் உள்ள சித்தமருத்துவப்பிரிவு மூலம், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்தமருத்துவப்பிரிவு விரிவான வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகதினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இந்த மருத்துவப்பிரிவில் இருந்து கடந்த கடந்த 2006-ஆம் ஜூலை மாதம் 6ம் தேதி முதல் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று தொடங்கியதும் கபசுரக்குடிநீர் வழங்கும் திட்டமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தற்போது வரை 17 ஆண்டுகளை கடந்த நிலையில், தினமும் இங்கு நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம், கபசுரக்குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சித்தமருத்துவப்பிரிவின் சேவையை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu