பஞ்சந்தாங்கி மலையில் ஒரே மாதத்தில் 10 முறை பற்றி எரிந்த காட்டுத்தீ; மக்கள் அச்சம்

பஞ்சந்தாங்கி மலையில் ஒரே மாதத்தில் 10 முறை பற்றி எரிந்த காட்டுத்தீ; மக்கள் அச்சம்
X

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே மேகமலையில் உள்ள பஞ்சந்தாங்கி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ.

தேனி மாவட்டம் பஞ்சந்தாங்கி மலையில் ஒரே மாதத்தில் 10 முறைக்கு மேல் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், மேகமலையில் உள்ள பஞ்சந்தாங்கி மலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட்டுகள் பதுங்கியிருந்தனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அந்த தீவிரவாதிகளை கைது செய்தனர். அதன் பின்னர் நக்சலைட் ஒழிப்பு படைப்பிரிவு அமைக்கப்பட்டது. அவர்கள் அத்தனை மலைக்கிராமங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, நக்சலைட்டுகளின் நடமாட்டத்தை முற்றிலும் முடக்கினர்.

இந்நிலையில், மேகமலை பஞ்சந்தாங்கி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 முறைக்கு மேல் காட்டுத்தீ பரவி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் மழை பெய்து கொண்டுள்ளது. ஆனாலும். இங்கு காட்டுத்தீ பரவி வருகிறது. இதற்கு காரணம் என்ன, மலைப்பகுதிகளில் பதுங்கியிருகஅகும் யாரோ இங்கு சமையல் செய்ய தீ பற்ற வைக்கின்றனர்.

அந்த தீ பரவி பற்றி எரிகிறது. பெரும்பாலும் போலீசாருக்கு தப்பி தலைமறைவாக வாழ்பவர்களும், நக்சலைட்டுகளுமே இந்த மலைப்பகுதியை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களின் மூலமாகவே காட்டுத்தீ பரவி இருக்கும். இதனால் வனத்துறையும், போலீசாரும் இணைந்து இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
ai as the future