ஆண்டிபட்டி- தேனி- போடியில் புறவழிச்சாலை: அமைச்சர் வேலு தகவல்

ஆண்டிபட்டி- தேனி- போடியில் புறவழிச்சாலை: அமைச்சர் வேலு தகவல்
X

போடி முதுவாக்குடி ரோட்டினை அமைச்சர்கள் வேலு, ஐ.பெரியசாமி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆண்டிபட்டி- தேனி- போடியில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்தார்.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் விபத்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கலெக்டர் முரளீதரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க.தமிழ்செல்வன், எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே, தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தேனி ஒன்றிய தலைவர் எஸ்.சக்கரவர்த்தி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் வேலு பேசியதாவது: விபத்தில் சிக்கியவர்களை மீட்க முதல் 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தின் மூலம் பலரது உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து எண்ணிக்கையினை குறைக்கும் மாவட்டத்திற்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 167 கி.மீ., மாநில சாலைகள் 230 கி.மீ., மாவட்ட சாலைகள் 222 கி.மீ., இதர சாலைகள் 490 கி.மீ.,என மொத்தம் 1109 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2021-22ம் ;நிதி ஆண்டில் 125 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 69 கி.மீ., துாரம் சாலை மேம்பாட்டு பணிகள் நடக்கிறது.தேனி நகராட்சி பகுதியில் நேருசிலையை சுற்றிலும் மேம்பாலம் கட்டப்பட உள்ளது. போடியில் அணைக்கரைப்பட்டி முதல் தர்மத்துப்பட்டி வரை சுற்றுச்சாலை, போடி தர்மத்துப்பட்டி முதல் ஏல விவசாயிகள் சங்க கல்லுாரி வரை சுற்றுச்சாலை, போடி அரைவட்ட சாலை, ஆண்டிபட்டி புறவழிச்சாலை, தேனி புறவழிச்சாலை என ஐந்து புறவழிச்சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்