விஞ்ஞானம் ஏற்காத அதிசயம், ஆனால் உண்மை: நம்ம ஏத்தக்கோவிலில் தாங்க இப்படி

விஞ்ஞானம் ஏற்காத அதிசயம், ஆனால் உண்மை:  நம்ம ஏத்தக்கோவிலில் தாங்க இப்படி
X

மூலிகை மருந்து. (மாதிரி படம்)

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் மனநல பிரச்னைகளுக்கு மூலிகை மருந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளதாக, விஞ்ஞானம் எட்டிப்பிடிக்க முடியாத பல அதிசயங்கள் இன்னமும் உலகம் முழுக்க நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆன்மீக வாதிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையே ஒரு இனம்புரியாத முரண்பாடு இருந்து கொண்டு தான் உள்ளது. என்ன தான் விஞ்ஞானம் உறுதிப்படுத்த மறுத்தாலும், அறிஞர்களும், விஞ்ஞானிகளும், டாக்டர்களும், பேராசிரியர்களும், அரசியல்வாதிகளும், பல உலக நாடுகளின் தலைவர்களும் இன்று ஆன்மீகத்தை மறுக்க தயாராக இல்லை. அதில் உள்ள விஷயங்களை கடைபிடிப்பதிலும் உறுதி காட்டுகின்றனர்.

நமது பிரதமர் மோடி ஒரு படி மேலே போய் நமது நாட்டின் பாரம்பரிய சிகிச்சை முறையினை மீட்டெடுக்க பல ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்கி தனித்துறையே உருவாக்கியுள்ளார். கொரோனா காலத்தில் கூட மருத்துவத்துறை ஏற்க மறுத்த பல விஷயங்களை நமது பாரம்பரிய சிகிச்சை வெற்றிகரமாக சாதித்து காட்டியது. நவீன மருத்துவத்தால் பலர் காப்பாற்றப்பட முடியாத நிலையிலும், பாரம்பரிய மருத்துவம் பலரது உயிரை பாதுகாத்தது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் நவீன மருத்துவம் இன்னும் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து விலகியே நிற்கிறது. இருக்கட்டும்.

அவர்கள் எப்போது உண்மையினை கண்டறிவார்களோ அப்போது வரை அதனை தொடரட்டும்.நம்ம ஊரில் அதாவது தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள ஏத்தக்கோயில் என்ற சிறு கிராமத்தில் 78 வயதினை கடந்த மூதாட்டி ஒருவர் இன்று தமிழக மனநல மருத்துவர்களை உலுக்கி எடுத்து வருகிறார். ஆமாம் எண்ணெய் கூட தேய்க்காத தலை, சில நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றப்படும் உடை, ஒப்பனை என்றால் என்வென்றே தெரியாத ஒரு அப்பாவித்தனம், எல்லோரையும் தன் குழந்தைகளாக நினைக்கும் அப்பாவித்தனம் கலந்த இந்த 78 வயது மூதாட்டி முத்தம்மாள் சிரிக்கும் அன்பு கலந்த சிரிப்பிற்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

அப்படி இவர் என்ன தான் செய்து விட்டார். அந்த மூதாட்டி முத்தம்மாள் கூறியதாவது: எங்கள் ஊரில் உள்ள வாசிமலை என்ற மலையை நாங்கள் பெருமாளாகவே நினைத்து பல ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். எங்களது குல தெய்வம் சின்னம்மா சாமி. எனக்கு தெரிந்து ஐந்து தலைமுறைகளாகவே எங்கள் குடும்பத்தினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்து வருகின்றனர். அதற்கு எத்தனை தலைமுறைக்கு முந்தி இந்த மருந்து கொடுக்கின்றனர் என்பதே தெரியாது. துாக்கமின்மை, மனக்குழப்பம், பைத்தியம், எதைப்பார்த்தாலும் அச்சம் என பலவித மனநலக்குறைபாடுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாங்கள் மருந்து கொடுக்கிறோம். இந்த மருந்திற்கான மூலப்பொருளாக பயன்படும் மூலிகையினை வாசிமலையில் இருந்தே பறித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு கண்களிலும் ஓரிரு சொட்டு மருந்து கொடுப்போம். சிறிதளவு குடிக்க தருவோம். தலையில் சிறிது தேய்த்து விடுவோம். எவ்வளவு பெரிய முரட்டு பைத்தியமாக இருந்தாலும் மூன்றே நாள் மட்டும் தான் இதனை செய்வோம். நான்காவது நாள் அவர்கள் குணமடைந்து இங்குள்ள விநாயகர் கோயிலில் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்து விட்டு வீடு திரும்புவார்கள்.

குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு 10 பேர் பலம் வந்து சேர்ந்து விடும். அந்த நிலையில் அவரை கட்டுப்படுத்துவது என்பது மகாசிரமமான காரியம். ஆனால் அவர்கள் மனிதர்கள் தானே… எங்கள் வீட்டிற்குள் அவர்களை அழைத்து படுக்க வைத்து மருந்து கொடுத்த சில மணி நேரங்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கும். காலை 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை மருந்து கொடுப்போம். மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் அவர்கள் மோட்டார் தோட்டத்தில் மூழ்கி குளிக்க வேண்டும்.

மருந்து மொத்தம் மூன்று நாள் மட்டுமே தருவோம். நான்காவது நாளில் முழுமையாக குணமடைந்து விடுவார்கள். இருப்பினும் அவர்கள் ஓரு மாதம் வரை உப்பு இல்லாத சாப்பாடு சாப்பிட வேண்டும். எண்ணெய் பலகாரம் உள்ளிட்ட எண்ணெய்யில் பொறித்த எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. கருவாடு, கோழி, ஆட்டு இறைச்சி உட்பட எந்த அசைவ உணவுகளையும் சாப்பிடக்கூடாது. அவர்களிடம் நாங்கள் கட்டணமாக ஆயிரம் ரூபாய் அல்லது ஐநுாறு ரூபாய் மட்டுமே வாங்குவோம். இந்த பணம் மருந்து தயாரிப்பு செலவுக்கு உரிய பணம். மற்றபடி எங்களது சேவை எப்போதுமே இ லவசம். இதுவரை நாங்கள் இந்த மருத்துவ சிகிச்சை மூலம் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை.

முற்றிலும் குணமடைந்த சிலர் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அடம்பிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நாங்கள் ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் வாங்கித்தாருங்கள் என கேட்போம். வெள்ளாட்டுக்குட்டி வாங்கித்தருவார்கள். நாங்கள் அதனை வளர்த்து ஊரில் கோயில் திருவிழா நடக்கும் போது ஒப்படைத்து விடுவோம். அந்த ஆட்டை அடித்து சாமிக்கு படையல் போட்டு கிராம மக்கள் முழுக்க சாப்பிடுவார்கள். இந்தா நிற்கிறதே இந்த ஆடு இப்படி குணமடைந்த ஒருவர் கொடுத்தது தான்.

மருந்து தயாரிக்க மூலிகை பறிக்கும் போதும், அதனை மருந்தாக மாற்றும் போதும், மருந்து கொடுக்கும் போதும் வாசிமலையானையும், சின்னம்மா சாமியையும் மட்டும் வேண்டிக்கொள்வோம். அந்த வேண்டுதல் நிச்சயம் மருந்தினை வேலை செய்ய வைத்து குணப்படுத்தி விடுகிறது. அதிதீவிர பைத்தியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாள் இங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கியிருந்து மருந்து சாப்பிடுவார்கள். லேசான பாதிப்பு உள்ளவர்கள் ஒருமுறை எங்களிடம் மருந்து போட்டுக்கொண்டு மற்ற இரண்டு நாட்களுக்கு உரிய மருந்தினை வீட்டிற்கு வாங்கிச் சென்று விடுவார்கள். குணமடைந்ததும் நான்காவது நாள் அவர்களே எங்களை வந்து பார்த்து நன்றி சொல்லி விட்டு, இங்குள்ள விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திவிட்டு செல்வார்கள்.

இதில் முக்கிய விசேசம் என்வென்றால் எனது தலைமுறையினர் கொடுத்தால் மட்டுமே இந்த மருந்து வேலை செய்யும். என் தந்தை கொடுத்தார்கள். தற்போது நான் கொடுக்கிறேன். எனது கணவர் மருந்து கொடுக்கும் போது உடனிருந்து உதவுவார். அவ்வளவு தான். அவர் மருந்து கொடுத்தாலும் குணமாகாது. ஆனால் நான் பெற்ற குழந்தைகள் மருந்து கொடுத்தால் குணமாகும். எங்களது ரத்தவழியினர் கொடுத்தால் மட்டுமே குணமாகிறது.

இந்த மூலிகை மருந்தில் எந்த ரகசியத்தையும் நாங்கள் மறைக்கவில்லை. கிராமம் முழுக்க நாங்கள் என்ன செய்து மருந்து தருகிறோம் என்பது தெரியும். பலர் இதேபோல் மருந்து தயாரித்து கொடுத்தார்கள். பலன் கிடைக்கவில்லை. இதனால் பெரியவீட்டுக்காரங்க… (எங்களைத்தான் அப்படி கூப்பிடுவாங்க…). கிட்டயே மருந்து சாப்பிடுங்கன்னு சொல்லி விட்டு யார் வந்தாலும் கிராம மக்களே எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகின்றனர்.

பல நீதிபதிகளின் வாரிகள், டாக்டர்களின் வாரிசுகள், பல போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் என எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு எங்களிடம் மருந்து சாப்பிட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஏர்வாடி, வேதாரண்யம் என தமிழகம் முழுவதும் இருந்தும் பலர் வந்து மருந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். தமிழகத்தின் மிகப்பெரிய மனநல மருத்துவர்கள் கூட பலரை எங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

நாங்கள் தருவது ஒரே வகையான மூலிகைகள் தான், ஒரே மாதிரியான மருந்து தயாரிப்பு முறை தான் ஆனால் நாங்கள் தயாரித்து நான் கொடுத்தால் குணமாகிறது. இதே கிராமத்தில் வேறு யார் கொடுத்தாலும் குணமாவதில்லை. இதற்கு இறைவன் அருள் காரணமா நாங்கள் வாங்கிய வரம் காரணமா தெரியவில்லை. நீங்களே நான் சொல்வது உண்மையாக இல்லையா என்பதை கிராமம் முழுக்க கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார். நாங்களும் கிரமம் முழுக்க விசாரித்தோம். ஒருவர் கூட மாற்றுக்கருத்தோ, சந்தேக கருத்தோ சொல்லவில்லை. சிலர் நாங்கள் பேட்டி எடுக்கும் போதே மருந்து சாப்பிட்டனர். ஆனால் நாகரீகம் கருதி அவர்களை படம் எடுக்கவில்லை. நீங்கள் சிகிச்சைக்காக இல்லாவிட்டாலும், ஆராய்ச்சிக்காகவாவது ஏத்தக்கோயில் சென்று விசாரியுங்களேன்.

Tags

Next Story