மோடியை வீழ்த்த தயாராகும் அமெரிக்கா..!.

மோடியை வீழ்த்த தயாராகும் அமெரிக்கா..!.
X

பைல் படம்

இந்தியாவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மோடியை வீழ்த்த வேண்டும் என்பதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது

உலகை இரண்டாம் உலகப்போருக்கு பின் 40 ஆண்டுகளாக ஆதிக்கமும், கடந்த 40 ஆண்டுகளாக உலகத்தையே தன் அடிமையாக வைத்து ஆண்ட அமெரிக்கா, அதற்கு எதிராக அல்லது போட்டியாக ஒரு நாடு வளர்ந்தால், அது பகை நாடு அல்லது நட்பு நாடு என்று பார்க்காது!. ஆம் அதை அழித்து ஒன்றுமில்லாமல் ஒழித்து விடும். அப்படிப்பட்ட அமெரிக்கா இன்று அதன் மிக மோசமான எதிரியாக பாவிப்பது ரஷ்யாவையோ அல்லது சீனாவையோ அல்ல, இந்தியாவை தான் ! ?! அப்படி ஒரு நாட்டை நேரடியாக அழிக்க முடியாது என்றால், அந்த நாட்டை பார்த்தால் அந்த உறவின் நிலைக்கு Strategic Partner என்று சொல்லி விடும். இந்தியாவை இப்போது அமெரிக்கா அப்படித்தான் அழைக்கிறது.

ரஷ்யாவும், சீனாவும் சுயநலமும், ஆதிக்கமும் கொண்ட நாடுகள். குறிப்பாக சீனாவின் நோக்கம் அடுத்த நாடுகளை அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, சுதந்திரத்தை கபளீகரம் செய்து விடும் என்பது அதன் கடந்த கால வரலாறாக இருந்தது. அல்லது அவை தங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலம் எந்த நாட்டையும் மறைமுகமாக ஆள முயற்சிக்கும். இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் விசுவாசமாக இருப்பது இந்த சீனாவிற்கு தான். ஆம் 1962, 67 சீனாவுடனான போரின் போது இந்த கம்யூனிஸ்ட்கள், இந்தியாவிற்கு எதிராக உள்நாட்டில், நம் ராணுவத்திற்கு எதிராக, சீனாவிற்கு ஆதரவாக கலகம் செய்தார்கள். ஆனால் அந்த கட்சியின் சாதாரண தொண்டனுக்கும் இது புரியாது. (மோடியும், அண்ணாமலையும் அதை புரிய வைக்க வேண்டும்).

எனவே உலக நாடுகள் ரஷ்யாவும், சீனாவும் என்ன தான் பலமாக இருந்தாலும் அவர்கள் பின்னால் நிற்க பயப்பட்டதால், அவர்கள் உலகத்தை அமெரிக்காபோல கோலோச்ச முடியவில்லை. ஆனால் அமெரிக்கா சிலபல யுக்திகள் மூலம் உலகை கட்டி ஆண்டது.

1) முதலாவது யுக்தி... கறை படிந்த அரசியல்வாதிகளை, சர்வாதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டு, தங்களுக்கு தேவையானவற்றிற்கு அந்த நாட்டையும், அதன் வளங்களையும் திருடினார்கள். அப்படிப்பட்ட தலைவர்களை தேர்தலில் வெற்றி பெற, ஆட்சியில் தொடர தேவையான உதவிகளை செய்தார்கள். அது நேரடியாக முடியாத போது தங்கள் நட்பு நாடுகள் மூலமோ அல்லது மீடியா வழியிலோ அதை செய்தார்கள்.

2) கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம், நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதில் அமெரிக்கா கில்லாடி. அவர்கள் அந்த கிறிஸ்தவத்தையும், கம்யூனிஸத்தையும் கலந்து தங்கள் எதிரி நாட்டின் பொருளாதர வளர்ச்சியை சிதைத்தார்கள். கூடங்குளம் முதல் எட்டு வழிச்சாலை வரை அவர்கள் செய்வது என்ன மத சேவையா? இல்லை அது தேசிய துரோகம்?

3) மீடியாக்களை வைத்து அது கட்டமைக்கும் பிம்பம் என்பது மிக அசாதாரணமான விஷயம். இன்று உலக மக்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கிற பல விஷயங்கள் பொய்யானவை. உதாரணமாக 1965 லேயே அணு ஆயுதம் தயாரிக்க இந்தியா தயார் ஆன நிலையில், பைக்கில் போய்க்கொண்டிருந்த அதன் தலைவரான ஹோமிபாபாவை விமான விபத்தில் கொன்றது அமெரிக்கா. இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முயன்ற லால்பக்தூர், ராஜீவ்காந்தியை கொன்றது அமெரிக்கா. மொராஜிதேசாயையும், வாஜ்பாயையும் வீழ்த்தியது அமெரிக்கா.

4) தொழிகளின் ஆதிக்கம் மூலம் மக்களின் உழைப்பை திருடியது அமெரிக்கா. 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய காலங்களில் மூன்று ஒரு பகுதி ஏற்றுமதி என்றால் அது அமெரிக்காவுடையதாக இருந்தது. ஒரு காலத்தில் அது 90% வரை அது உயர்ந்தது. அதாவது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், இலங்கைக்கு, அமெரிக்காவின் மூலம் வாங்கி விற்கப்பட்டது. அதாவது ₹100 க்கு இந்தியாவிடம் இருந்து வாங்கி, அதை அழகாக பேக் செய்து, $3 டாலருக்கு விற்று 100% ஆதாயம் பார்த்தது.

5) மிக முக்கியமாக, உலக நாணயமாக அமெரிக்க டாலரை வைத்து, அது உலகத்தின் மிகப்பெரிய ஒட்டுண்ணியாக உலக மக்களின் இருந்தது. ஆனால் அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் போதுமான நாடுகள் ஆதரவு இல்லை. ஏனெனில் அமெரிக்காவிடம் இருந்து தப்பித்தால் இவர்களிடம் மாட்டிக்கொள்வோம் என்ற நிலையால், தெரியாத கொள்ளிவாய் பிசாசை விட தெரிந்த பேயே பரவாயில்லை என்ற நிலையில் உலக நாடுகள் இருந்தன.

ஆனால் இந்தியா அப்படிப்பட்டதல்ல, தாயுள்ளம் கொண்ட நாடு. கொரானாவின் போது உலக நாடுகள் தங்கள் தடுப்பூசியை வைத்து வியாபாரம் செய்ய நினைத்தபோது, அதை 87 நாடுகளுக்கு இலவசமாக கொடுத்து உதவியது. உக்ரைன் போரின் போது ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டால் உலகம் முழுவதும் பசி, பட்டினி பரவிய போது, இந்தியா கோதுமையை இலவசமாக ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவியது. தற்போது G20 நாடுகளின் தலைமை ஏற்றபின், அந்த அமைப்பை அமெரிக்க நேச நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்து உலகின் ஏழை நாடுகளின் குரலாக ஒலித்தது.

ஏழை நாடுகளின் இயற்கை வளங்களை தனதாக்காமல், அவர்களுக்கு ஈகுவல் பார்ட்னர் ஆக்கி வியாபார தர்மம் காக்க முன்வந்தது. அதனால் ஆப்ரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை, தங்கள் இயற்கை வளங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் மீறி சொன்னது.

அப்படிப்பட்ட இந்தியா ஒரு தனி நாடாக அமெரிக்காவை எதிர்த்திருந்தால், தனிமைப்படுத்தி, பொருளாதார தடையை விதித்து, நசுக்கி இருக்கும். ஆனால் மிக ஆழமாக திட்டமிட்டு, BRICS எனும் பலமான ஒரு கூட்டணியை ஆரம்பித்து வைத்துள்ளது. ஆயுத பலத்தை பெருமளவில் உயர்த்தி உள்ளது. பொருளாதாரத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி வளரக்கூடிய நிலையில் மட்டுமல்ல, அமெரிக்காவின் முதுகெலும்பான டாலரின் ஆதிக்கத்தை அசைத்து பார்த்து விட்டது.

அப்படி இருக்க முக்கிய காரணம் மோடி. அந்த மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்காவின் ஆதிக்கம் மட்டுமல்ல, அதன் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்ற நிலையில் மோடியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் எடுக்க அமெரிக்கா தயங்காது. ஆம் அதன் ஜனாதிபதி கென்னெடியையே அதன் நோக்கத்திற்கு எதிராக நின்றதால் கொன்ற நாடு அது. தனது கட்டுப்பாடை மீறிய ஜனாதிபதிகளை ஜனநாயகம் என்ற பெயரில் மீடியா மூலம் வீழ்த்த தயங்கியது இல்லை, அதில் கடைசியாக வீழ்ந்தது டொனால்ட் ட்ரம்ப். அது பயன்படுத்திய ஆயுதங்கள் கண்ணுக்கு தெரியாதவை, சாதாரண மக்களுக்கு புதியாதவை. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

1) அரபு நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்பிய போது, என்னை எதிர்த்தால் (கச்சா) எண்ணெய் வாங்க மாட்டேன் என்று அரபுநாடுகளை பணிய வைத்தது இந்தியா. அதில் அமெரிக்காவின் சுய நலத்தை அரபுநாடுகளுக்கு புரிய வைத்ததால், இன்று அவர்களும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக கொடி தூக்கியுள்ளார்கள்.

2) பாகிஸ்தானை வைத்து 75 வருடங்களாக விளையாடிய அதன் துருப்பு சீட்டு, இன்று அதே அமெரிக்காவால் கிழிந்து எரியப்பட்டுள்ளது, இலவச மாவுக்காக அதன் மக்கள் நெரிசலில் தெருவில் சாகும் பிச்சைக்கார நிலையில் வீழ்ந்து கிடக்கிறது.

3) ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் பொருளாதாரத் தடையை போடுவேன் என்று அமெரிக்கா சொன்ன போது, முடிந்தால் செய்து பார் என்று இந்தியா சொல்லும் என்று அது கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆடித்தான் போனது, இல்லை, இல்லை அடங்கி பின்வாங்கியது. அங்கே அது மாற்றாக சொன்னது இந்தியா எங்கள் கூட்டாளி தான் என்று.

4) அதானி என்ற சாம்ராஜ்யத்தை வீழ்த்தி விடுவோம் என்று ஜார்ஜ் சோரஸ் என்ற நபரை வைத்து மிரட்டியது. இந்தியா அசரவில்லை. ஆனால் இப்போது வீழ்ந்து போனது அமெரிக்க வங்கிகள். அதன் விலைவாசி உச்சத்தை தொடுகிற வேளையில், அதன் கடனின் மீது கட்டமைக்கப்பட்ட ஹாலோ பொருளாதாரம் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வீழும் காகிதக்கோட்டை. . வெளிநாட்டில் கலவரங்களை தூண்டிய அமெரிக்கா இன்று விலைவாசி உயர்வால் அவர்களின் மக்கள் போராட்டத்தை சந்தித்து வருகிறது. அங்கு மக்கள் வீதிக்கு வந்து போராட தயாராகி விட்டார்கள். அதன் கூட்டணிகளான ஐரோப்பா நாடுகளில் தினமும் அரசுக்கு எதிரான போராட்டம்.

5) தற்போது அது கையில் எடுத்த ஆயுதம் காலிஸ்தான். இங்கிலாந்தில், கனடாவில், அமெரிக்காவில், ஐரோப்பாவில், ஆஸ்திரேலியாவில் என்று அதன் ஸ்லீப்பர் செல்கள் ஒருசேர இயக்கப்பட்டது. இங்கிலாந்தில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டது. இங்கிலாந்து கண்டுகொள்ளாமல் நழுவியது. இந்தியாவில் உள்ள, பிரிட்டிஷ் தூதரகங்களுக்கு இருந்த பாதுகாப்பை நம் அரசு குறைத்தது.

இதையெல்லாம் எதிர்பார்க்காத இங்கிலாந்து, இன்று இந்தியாவிடம் கையேந்தும் நிலைக்கு மாறி விட்டது . இன்று அந்த நாடு மூன்றாக அல்லது நான்காக துண்டாடப்படலாம் என்று பயந்து பின் வாங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரங்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவில் உள்ள தூதரகங்களுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. அங்கே வாழும் இந்தியர்கள், இந்தியாவின் அம்பாஸிடர்களாக இந்திய தேசிய கொடியை உயர்த்தி இந்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள் ளார்கள்.

தன்னிறைவை நோக்கிய நிலையில், இந்தியாவை பகைத்தால் பாதிக்கப்படப்போவது நாம்தான் என்று தெரிந்து கொண்டாலும், இது அமெரிக்காவிற்கு வாழ்வா, சாவா என்ற பிரச்னை. இன்று இதற்கெல்லாம் முக்கிய காரணம் மோடி, அவரை வீழ்த்தா விட்டால், வீழ்ந்து போவது அமெரிக்கா என்பதால், மோடிக்கு எதிராக அமெரிக்கா இன்னும் பல ஆயுதங்களை அது பயன்படுத்தும்.

இப்போது, இந்தியனாய் மட்டுமல்ல, உலகின் காவலனாய், விஸ்வகுருவாக இந்தியா உயரவேண்டுமெனில், இந்திய பிரதமருக்கு எதிரான இந்த மேலை நாடுகள் செய்யும் சதிக்கு எதிராக இன்று நாம் எழுந்து நிற்காவிட்டால், நம்மை மட்டுமல்ல, உலகை மீண்டும் வீழ்த்தி அடிமையாக்கி விடுவார்கள். எனவே மோடியின் பின்னால் நின்று நாம் காக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!