தேனி ரயில்வே கேட்டில் சிக்கிய ஆம்புலன்ஸ்

தேனி ரயில்வே கேட்டில் சிக்கிய ஆம்புலன்ஸ்

தேனி ரயில்வே கேட்டில் சிக்கிய ஆம்புலன்ஸ். இடம்: பெரியகுளம் ரோடு பெத்தாட்ஷி விநாயகர் கோயில் எதிரே.

தேனியில் ரயில்வே கேட்டில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்சில் இருந்த நோயாளி 10 நிமிடங்கள் வரை காத்திருக்கும் நிலை உருவானது.

மதுரை- தேனி ரயில்வே வழித்தடத்தில் தேனி நகர் பகுதியில் மட்டும் மூன்று கேட்டுகள் உள்ளன. இந்த மூன்று ரயில்வே கேட்டுகளும் மிக, மிக முக்கியமானவை. கேட் ஒருமுறை மூடப்பட்டால் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிடம் வரை வாகனங்கள் நிற்க வேண்டி உள்ளது. சாதாரண போக்குவரத்து வாகனங்கள் நிற்பதில் பிரச்னை இல்லை. பெரியகுளம் ரோடு, பங்களாமேடு, மதுரை ரோட்டில் அதிகளவு ஆம்புலன்ஸ்கள் சென்று வரும். அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை ஆம்புலன்சில் கொண்டு வரும்போது கேட் மூடப்பட்டால் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் அதிகம் சென்று வரும் வழித்தடங்களில் தான் தேனி நகரில் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

Tags

Next Story