கேமராவில் சிக்கினார் குடிநீர் குழாய் மீட்டர்களை திருடிய முதியவர்

கேமராவில் சிக்கினார் குடிநீர் குழாய்   மீட்டர்களை திருடிய முதியவர்
X
தேனியில் வீட்டு இணைப்பு குழாய்களில் உள்ள அனுமினிய மீட்டர்களை திருடிய முதியவர் குறித்த வீடியோ போலீசிடம் சிக்கி உள்ளது.

தேனியில் வைகை குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வீடுகளுக்கும் சப்ளையாகும் தண்ணீரை அளவெடுக்கும் மீட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. தேனி நகர்பகுதியில் மட்டும் சுமார் முப்பதாயிரம் வீடுகளில் இந்தமீட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மீட்டர்கள் அலுமினியத்தால் ஆனவை. அரைகிலோவிற்கு மேல் எடையிருக்கும். பெரும்பாலான வீடுகளில் இந்த மீட்டர்கள் வீட்டு கேட்டின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளின் உள்ளே இணைக்கப்பட்ட மீட்டர்கள் ஒன்று கூட திருடு போகவில்லை. ஆனால் வெளியில் இணைக்கப்பட்ட மீட்டர்கள் பல நாட்களாக திருடு போய்க்கொண்டு இருந்தது.

இது வீட்டின் உரிமையாளர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் தலைவலியை கொடுத்தது. இந்நிலையில் இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு ஒரு முதியவர் கே.ஆர்.ஆர்., நகர் பத்தாவது தெருவில் உள்ள வீடுகளின் முன்பு இணைக்கப்பட்டிருந்த மீட்டர்களை திருடியது அங்குள்ள ஒரு வீட்டின் சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த பதிவுகள் தற்போது போலீசிடம் உள்ளன. மிகவும் தெளிவாக திருடியவர் குறித்து பதிவாகி உள்ளது. இதனால் இதனை வெளியிட்டால் குற்றவாளி சுதாரிக்க கூடும் என்று போலீசார் பதிவுகளை வெளியிடவில்லை. இந்த பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி முதியவரை தேடி வருகின்றனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!