கம்பம் அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்ட நிதி ஒதுக்கீடு

கம்பம் அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்ட நிதி ஒதுக்கீடு
X
கம்பம் அரசு மருத்துவமனையில் அதீதீவிர சிகிச்சை பிரிவு கட்ட 20 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து கம்பம் ஐம்பது கி.மீ., தொலைவில் உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தேனி மருத்துவக் கல்லுாரிக்கு வரும் நோயாளிகள் வந்து சேரும் முன்னர் உயிரிழந்து விடுகின்றனர்.

எனவே கம்பம் அரசு மருத்துவமனையினை விரிவாக்கம் செய்ய மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கம்பம் அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் செலவில் அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுகளுடன் கூடிய ஆறு மாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மாநில அரசும் தனது பங்குத்தொகை மூலம் கம்பம் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு மருத்துவ வசதிகளை செய்ய உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா