கூடலுாரை கலக்கிய அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள்: கட்சியினர் உற்சாகம்

கூடலுாரை கலக்கிய அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள்: கட்சியினர் உற்சாகம்
X

கூடலுார் நகராட்சியில் அ.தி.மு.க., பெண் வேட்பாளர்கள் ஐந்து பேர் ஒருங்கிணைந்து ஓட்டு சேகரித்தனர். இடமிருந்து இரண்டாவதாக இருப்பவர் சேர்மன் வேட்பாளர் பா.லோகநாயகி.

கூடலுார் நகராட்சி பெண் வேட்பாளர்கள் ஐந்து பேர் ஒருங்கிணைந்து வார்டுகளில் இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தனர்.

கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அத்தனை வார்டுகளிலும் அ.தி.மு.க., களம் இறங்கியுள்ளது. இதில் 6வது வர்டில் மட்டும் அ.தி.மு.க., வேட்பாளர் திடீரென வாபஸ் பெற்றார்.

தற்போதைய சூழலில் 11 வார்டில் அ.தி.மு.க., சார்பில் பெண் வேட்பாளர்களும், 9 வார்டில் ஆண் வேட்பாளர்களும் நிற்கின்றனர். அ.தி.மு.க., சார்பி்ல் சேர்மன் வேட்பாளராக 16வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் பா.லோகநாயகி களம் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் பா.லோகநாயகி, 5வது வார்டு வேட்பாளர் சுபீதா, 12 வது வார்டு வேட்பாளர் சாந்தி, 14வது வார்டு வேட்பாளர் முத்துமணி, 15வது வார்டு வேட்பாளர் தேவதர்ஷினி ஆகியோர் ஒருங்கிணைந்து இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். 16வது வார்டில் தொடங்கிய பிரச்சாரம் தொடர்ச்சியாக 5, 12, 14, 15 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது. பெண் வேட்பாளர்கள் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்தது அ.தி.மு.க.,வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!