நிலமோசடியில் ஈடுபட்டதாக அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம்

நிலமோசடியில் ஈடுபட்டதாக அதிமுக  ஒன்றிய செயலாளர் பதவி  நீக்கம்
X
நில மோசடி புகாரில் சிக்கிய பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

தேனி அருகே நில மோசடியில் ஈடுபட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தேனி அருகே பெரியகுளம் ஒன்றியம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்னபிரகாஷ். இவர் அதிமுகவில் பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது நிலமோசடி புகார் எழுந்தது. இவர் முறைகேடாக பட்டா பெற்று அரசு நிலத்தை அபகரித்ததாக கூறி, தேனி மாவட்ட நிர்வாகம் நிலப்பட்டாவை ரத்து செய்தது. இது தொடர்பாக தாசில்தார்கள், சர்வேயர்கள் உட்பட ஆறு அதிகாரிகள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னை தற்போது பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், அதிமுக மேலிடம் அன்னபிரகாஷை ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது. இவர் வகித்து வந்த பொறுப்பை தற்போது கிழக்கு மாவட்ட ஒன்றிய செயலாளராக இருக்கும் செல்லமுத்து கூடுதலாகக் கவனிப்பார் என அதிமுக தலைமை

இது குறித்து அதிமுக வினர் கூறுகையில், அன்னபிரகாஷ் நில மோசடி செய்த விவகாரம், தற்போது ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாளில் வர உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை ஒருதலைப்பட்சமானது என அன்னபிரகாஷ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முடிவு தெரியும் முன்னதாகவே, கட்சி மேலிடம் பதவியை பறித்தது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. ஒருவர் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதே பதவியை பறித்தால், இதற்கு முன்னர் எத்தனை பேர் வீடுகளில் ரெய்டுகள் நடந்து எவ்வளவு பணம் நகை, கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் கட்சி பொறுப்புகளில் தானே உள்ளனர். எனவே அதிமுக மேலிடம் பிரச்னையில் சிக்கும் நிர்வாகிகளின் தரப்பிலும் முழுமையான விளக்கம் கேட்க வேண்டும். இது குறித்து நாங்கள் மேலிடத்திற்கு வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்