மீண்டும் 137 அடியை தொட்டது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

மீண்டும் 137 அடியை தொட்டது முல்லைப்பெரியாறு  அணை நீர்மட்டம்
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் 137 அடியாக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் 137 அடியை எட்டிய நிலையில், வைகை அணை நீர் மட்டம் ஒரு மாதத்தை கடந்தும் முழுமையாக நிரம்பி நிற்கிறது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிக, மிக அதிகமாக பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 3 மி.மீ., போடியில் 2 மி.மீ., கூடலுாரில் 3.2 மி.மீ., மஞ்சளாறில் 36 மி.மீ., பெரியகுளத்தில் 21 மி.மீ., பெரியாறு அணையில் 8.2 மி.மீ., தேக்கடியில் 8.6 மி.மீ., சோத்துப்பாறையில் 14 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வீரபாண்டியில் 5.4 மி.மீ., மழை பெய்தது. முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 137 அடியை எட்டி உள்ளது.வைகை அணை நீர் மட்டம் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக 70 அடியை தாண்டியே நிற்கிறது. முழு கொள்ளவு 71 அடி என்பதால், அணைக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள சோத்தப்பாறை அணை, மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணை உட்பட அத்தனை அணைகளும் நிரம்பிய நிலையில் தான் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி