தேனி அதிமுகவிற்கு கடந்த முறை 11: இப்போ எத்தனை கிடைக்கும்?..

தேனி அதிமுகவிற்கு கடந்த முறை 11:  இப்போ எத்தனை கிடைக்கும்?..
X

தேனி நகராட்சி அலுவலகம் 

ஜெ., முதல்வராக இருந்த போது, கூட்டணி பலத்துடன் நின்று 11 வார்டுகளை மட்டுமே கைப்பற்றிய அ.தி.மு..க, இந்த முறை எத்தனை வெல்லும்?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கூட்டணி பலத்துடன் நின்ற அ.தி.மு..க, தேனி நகராட்சியில் அப்போது 11 இடங்களை பெற்றது. சுயேச்சை வேட்பாளர்களையும் விலைக்கு வாங்கி, கூட்டணி பலத்துடன் தேனி நகராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது.

தற்போத உடைந்த அ.தி.மு..க., ஜெ., போன்ற பலம் வாய்ந்த தலைவர் இல்லாத அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதுவும் இல்லாத அ.தி.மு.க., தற்போது 33 வார்டுகளிலும் களம் இறங்கி உள்ளது. இம்முறை அக்கட்சிக்கு எத்தனை கிடைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் கடந்த முறை கருணாநிதி தலைமையில் கூட்டணி பலத்துடன் இருந்த தி.மு.க., தேனியில் 8 வார்டுகளை பெற்றது. தற்போது கருணாநிதி இல்லாத நிலையில் கூட்டணி பலம் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு தனி இமேஜ் மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதேபோல் தற்போது தி.மு.க., வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மனுதாக்கல் செய்திருந்தாலும் கூட்டணிக்கான ஒதுக்கீடு இன்னும் நிறைவடையவில்லை.

வேட்புமனு வாபஸ் வரை கூட்டணி பேசலாம் என்ற நிலையே உள்ளது. குறைந்தபட்சம் 24 வார்டுகளில் தி.மு.க. நிற்கும் என தெரிகிறது. மொத்தம் 17 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே தலைவர் பதவியை கைப்பற்ற முடியும். எனவே இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்