நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம்: பின்வாங்கும் அதிமுக முக்கிய நிர்வாகிகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் நிற்பதற்கு கொங்கும ண்டலம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் பின்வாங்கி வருவதால் அக்கட்சித்தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் கொங்குமண்டலத்தில் மட்டும் அ.தி.மு.க. மிகவும் வலுவாக உள்ளது. தென் மாவட்டங்களில் கூட அ.தி.மு.க. பவவீனமாகவே உள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரபாலாஜி நானே நொந்துபோய் இருக்கிறேன். என்னால் செலவெல்லாம் செய்ய முடியாது என பகிரங்கமாகவே கூறி விட்டாராம்.
இந்த தகவல் அனைத்து மீடியாக்களிலும் வலம் வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமா இந்த நிலைமை. இருக்கிறது என்றால் மாநிலம் முழுவதும் இதே சூழல் தான் நிலவுகிறது. கொங்குமண்டலம் மட்டுமே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பின்னால் அணிவகுத்து நிற்கிறது என அதிமுகவினர் பகிரங்கமாகவே கூறி வருகின்றனர். அவர்கள் கூறும் காரணங்களும் புறக்கணிக்கத்தக்கவை இல்லை என்றே கூறலாம்.
அவர்கள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி பீடத்தில் இருந்த போது, கட்சியின் மேல்மட்ட தலைவர்களே அள்ளிக்குவித்தனர். பிற நிர்வாகிகளுக்கு பணமோ, பங்கோ முறையாக போய் சேரவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலில் பணம் செலவு செய்யாமல் வெற்றி பெறவே முடியாது. நகராட்சி வார்டு கவுன்சிலருக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் செலவிட வேண்டும். பேரூராட்சி வார்டு கவுன்சிலருக்கும் ஏறத்தாழ இதே செலவு பிடிக்கும் மாநகராட்சி வார்டு கவுன்சிலருக்கு ரூ. 10 லட்சம் வரை செலவாகும்.
இப்படி செலவு செய்து வெற்றி பெற வேண்டும். அதன் பின்னர் கவுன்சிலர்களிடம் ஒட்டுவாங்கி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்ற தனியாக செலவு செய்ய வேண்டி கட்டாயம் இருப்பது வேறு கதை. அது அந்த சூழ்நிலைக்கு ஏற்ப கூடவோ, குறையவோ செய்யும். இவ்வளவு செலவு செய்து வென்றாலும், திமுக ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெறக்கூடிய தலைவரே கவுன்சிலரோ செலவு செய்த பணத்தை எடுக்க முடியுமா கட்சி நிர்வாகிகள் முன்னே நிற்கும் மிகப்பெரிய கேள்வி.
10 ஆண்டு ஆட்சியில் பணம் சம்பாதித்த அதிமுக மேல்மட்ட தலைவர்கள் தற்போது செலவு செய்ய மிகவும் யோசிக்கின்றனர். இந்த சூழலில் இவர்களை நம்பி களம் இறங்கி கடன்பட நாங்கள் தயாராக இல்லை என்பதே இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகும். கொங்குமண்டலம் தவிர மாநிலம் முழுவதும் இதே சூழல் தான் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிமுக இந்தத் தேர்தல்களத்தில் திமுகவிற்கு கடும் சவாலாக இருக்குமா என்பதை தங்களால் உறுதியுடன் கூற முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu