/* */

அ.தி.மு.க. கூட்டணியே வேண்டாம்: டெல்லியில் அண்ணாமலை மீண்டும் அழுத்தம்

டெல்லியில் பா.ஜ., தலைவர்களை சந்தித்த அண்ணாமலை தமிழகத்தில் அ.தி.மு.க.,கூட்டணியே வேண்டாம் என மீண்டும் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

அ.தி.மு.க. கூட்டணியே வேண்டாம்:  டெல்லியில் அண்ணாமலை மீண்டும் அழுத்தம்
X

அண்ணாமலை

தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியே வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் மீண்டும் அழுத்தமாக கூறி உள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணி இடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க., அடக்கி வாசித்தாலும், அண்ணாமலை அதிரடி காட்டி வருகிறார். எந்த காரணம் கொண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கொந்தளிக்கும் அண்ணாமலை, தமிழக கூட்டணி விவகாரத்தை கவனிக்கும் டெல்லி பா.ஜ., தலைவர் பியூஸ்கோயல் தமிழகத்திற்கு வந்த போது அவரைக்கூட சந்திக்க மறுத்து விட்டார்.

இதனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி குறித்த முடிவை டெல்லி தலைமை தான் எடுக்கும் என்று தெரிவித்தார். இதன்பின்னர் அண்ணாமலையும் அதே கருத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனையில் தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும், அ.தி.மு.க.வுடன் கூட்டணியை தொடர வேண்டாம் என்று அண்ணாமலை அமித் ஷாவிடம் எடுத்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க. உடனான கூட்டணி தொடர்ந்தால், நினைத்த அளவிற்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் வளர முடியாது என்றும் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின்னர் அண்ணாமலை கருத்தை ஏற்றுக் கொண்ட அமித்ஷா இந்த விஷயம் குறித்து நாடாளுமன்றத் தேர்வு குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அண்ணாமலையிடம் உறுதி அளித்துள்ளார். பா.ஜ.க.வின் பிற தலைவர்களையும் சந்திக்கும் அண்ணாமலை தனது கருத்தை முழுமையாக தெளிவுபடுத்திய பின்னரே தமிழகம் வருவார் எனக்கூறப்படுகிறது.

Updated On: 24 March 2023 12:41 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...